செவ்வாய், 8 செப்டம்பர், 2015

கையுந்து பந்து போட்டி 30.09.2015 நடைபெற்றது

ஒருங்கிணைந்த கையுந்து பந்து கழகம் காளையார்கோவில்

               
ஒருங்கிணைந்த கையுந்து பந்து கழகம் காளையார்கோவில்.  30.09.2015 அன்று இணைப்பு கையுந்து பந்து கழகங்களிடையே கையுந்து பந்து போட்டியை நடத்தியது.

ஒருங்கிணைந்த கையுந்து பந்து கழகத்தில் பதிவு பெற்ற நான்கு அணிகள் இப்போட்டியில் பங்கு பெற்றனர்.  லீக் மற்றும் நாக்அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன.  லீக்முறையில் முதல் இரண்டு இடங்கள் பெற்ற அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று விளையாடியன, அடுத்த இரண்டு அணிகள் 3 மற்றும் 4ஆம் இடத்திற்கு போட்டியிட்டனர்.

லீக் முறையில் நடைபெற்ற போட்டியில் தமிழன் கையுந்து பந்து கழகம்,  மூன்று போட்டிகளிலும் வென்று முதல் இடத்தையும், ஆசான் கையுந்து பந்து கழகம், இரண்டு போட்டிகளில் வென்று இரண்டாம் இடத்தையும், சாம்யூத் ஸ்போர்ட்ஸ் கிளப் ஒரு போட்டியில் வென்று மூன்றாம் இடத்தையும், யாகு ஸ்போர்ட்ஸ் கிளப் நான்காம் இடத்தையும் பெற்றது.

நாக்அவுட் முறையில் நடைபெற்ற போட்டியில் அசான் முதல் இடத்தையும், தமிழன் இரண்டாம் இடத்தையும் சாம்யூத் ஸ்போர்ட்ஸ் கிளப் மூன்றாம் இடத்தையும், யாகு ஸ்போர்ட்ஸ் கிளப் நான்காம் இடத்தையும் பெற்றது.

        ஒருங்கிணைந்த கையுந்து பந்து கழகத் தலைவர், செயலாளர், பொருளாலர் தலைமையில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

போட்டிச்சுருக்கம்
நாள் : 30.08.2015
இடம் : மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன கையுந்து பந்து மைதானம்.

பங்கு பெற்ற அணிகள்  

ஆசான் கையுந்து பந்து கழகம்,

தமிழன் கையுந்து பந்து கழகம் ,

சாம்யூத் ஸ்போர்ட்ஸ் கிளப்,

யாகுஸ்போர்ட்ஸ்கிளப்



அணி
போட்டிகளின் எண்ணிக்கை
வெற்றி
தோல்வி
புள்ளி
ஆசான் கையுந்து பந்து கழகம்
4
3
1
9.5
தமிழன் கையுந்து பந்து கழகம்
4
3
1
9.5
சாம் ஸ்போர்ட்ஸ் கிளப்  
4
2
2
7
யாகு ஸ்போர்ட்ஸ் கிளப்
4
0
4
2



திங்கள், 7 செப்டம்பர், 2015

காளையார்கோயிலில் ரூ. 1.60 கோடியில் விளையாட்டு அரங்கம் கட்ட திட்டம்



ஒருங்கிணைந்த கையுந்து பந்து கழகம் நிர்வாகக் குழு அலுவல்கள்

நிர்வாகக்குழு
நிர்வாகக்குழுவானது தலைவர், துணைத்தலைவர், செயலாளர், துணைச்செயலாளர், பொருளாளர் அவர்களுடன் ஒரு கிளப்பிற்கு இரண்டு நிர்வாகக் குழு உறுப்பிளர்களைக் கொண்டது.  பதவிக் காலம் இரண்டு ஆண்டுகள்.

· ஒரு தலைவர், ஒரு துணைத்தலைவர், ஒரு செயலாளர், ஒரு துணைச் செயலாளர் ஒரு பொருளாளர், ஒரு கிளப்பிற்கு இரண்டு உறுப்பினர்கள் வீதம்  சேர்ந்த ஒரு நிர்வாகக் கமிட்டி சங்கப் பணிகளையும் அலுவல்களையும் ஏற்று நடத்தி வரும்.

· தலைவர், துணைத் தலைவர், செயலாளர், துணைச் செயலாளர், பொருளாளர் ஆக ஐந்து பேர்களும் உத்தியோக உறுப்பினர்களாவார்கள்.  நிர்வாகக்குழு ஆண்டு கூட்டத்தில் பெரும்பான்மை வாக்குகளுடன் ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாக கமிட்டி இரண்டு ஆண்டுகளுக்குப் பதவியிலிருக்கும்.  ஒரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மறுமுறையும் தேர்தலில் நிற்கலாம்.  ஆனால் ஒருவர் தொடர்ச்சியாக  நான்கு ஆண்டுகள் (இரண்டு முறை) ஒரே பதவியில் நிற்க முடியாது.  ஒரு முறை இடைவெளி விட்டு பிறகு தேர்தலில் நின்று வரலாம்.

நிர்வாகக் குழு அலுவல்களும் அதிகாரங்களும் 

· சங்கத்தின் சகல பொறுப்புக்களையும் ஏற்று நடத்தும் பொறுப்பு நிர்வாகக் குழுவிற்கு உண்டு.  நிர்வாகக் குழு மாதம் ஒரு முறை கூட வேண்டும்.  அவசியமேற்பட்டால் இடைக் காலத்திலும் கூடலாம்.

· நிர்வாகக் குழுக் கூட்டடத்திற்கும் தொடர்ந்தாற் போல மூன்று கூட்டங்களுக்கு வருகை தராதவர்கள் உறுப்பினர் பதவியை இழந்து விடுவார்கள.

· நிர்வாகக் குழுக் கூட்டத்திற்கும் அதன் விசேசக் கூட்டத்திற்கும் ஏழு நாட்கள் முன்னதாக அறிவிப்பு அனுப்பி கூட்டம் கூட்டடப்பட வேண்டும்.
· நிர்வாகக் குழுக் கூட்டத்திற்கு பத்து  பேர்கள் ஆஜரில் இருந்தால் தான் கூட்டம் கூட்ட முடியும்.

· நிர்வாகக் குழுக்உறுப்பினர்களில் எவரும் இராஜினாமா செய்ய விரும்பினால் எழுத்து மூலம் செயலாளருக்கு தெரிவிக்க வேண்டும்.  அந்த இராஜினாமா கடிதம்அடுத்து வரும் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் வைத்து முடிவு செய்யப்படும்.  அதுவரை இராஜினாமா கடிதம் கொடுத்தவர் பதவியிலிருப்பதாகவே கருதப்படுவார்.  நிர்வாகக் குழுவில் இடைக்காலத்தில் ஏற்படும் காலிஸ்தானத்தை நிர்வாகக் குழுவே சங்க உறுப்பினர்களிலிருந்து ஒருவரை எஞ்சியுளள காலத்திற்கு தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

· நிர்வாகக்குழுவில் ஒப்புக் கொள்ளப் பெறாத எந்த செலவினமும் சங்கத்தைக் கட்டுப்படுத்தாது.

· விளையாட்டுப் பயிற்றுனர்கள், ஏற்பாடு செய்யும் பொழுதும், விளையாட்டுப் போட்டிகள் நடத்தும் பொழுதும் அதன் செலவினத்தை முன்கூட்டியே நிர்வாகக்குழுவில் அனுமதி பெறவேண்டும்.


தலைவர்:-
நிர்வாகக் குழு கூட்டங்களுக்கு தலைமை தாங்கவும், வாக்கெடுப்பு நேர்ந்தால் வாக்கெடுப்பு நடத்தவும், முடிவு கூறவும், ஒழுங்குப் பிரச்சனை மீது தீர்ப்பு கூறுவதற்கும் கூட்டத்தை ஒத்திவைக்கவும் தலைவருக்கு அதிகாரம் உண்டு.
துணைத்தலைவர்:-
தலைவரில்லாத சமயங்களில் தலைவரின் அதிகாரங்கள் துணைத்தலைருக்கு உண்டு.


செயலாளர்:-
சங்கக் காரியங்கள் அனைத்தும் நடத்தவும், மகாசபை நிர்வாகக் குழு  முதலியவைகளைக் கூட்டவும், கடிதப் போக்குவரத்து செய்யவும் ஆண்டறிக்கை தயாரிக்கவும், நிகழ்ச்சிக் குறிப்புப் புத்தம் மினிட் புத்தகங்கள் தஸ்தாவேஜுகள் இதர சாமான்களை தனது பொறுப்பில் வைத்திருக்கவும் நிர்வாகக் குழுவின் அனுமதியின் பேரில் செலவு செய்யவும் அவசர காரியங்களை நிறைவேற்றும் பொருட்டு சுற்றறிக்கை அனுப்பவும் செயலாளருக்கு அதிகாரம் உண்டு.
செயலாளர் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்:-
1.
2.
3.

துணைச் செயலாளர்:-
செயலாளரில்லாத சமயங்களில் செயலாளரின் அதிகாரங்கள் அனைத்தும் துணைச் செயலாளருக்கு உண்டு.

பொருளாளர்:-
சங்கத்திற்கு வரவேண்டிய நன்கொடைகள் சந்தா பணங்கள் தொகைகள் வசூலித்து சங்கக் கணக்கில் செலுத்துதல், சங்கத்தின் அவசரமான செலவுகளுக்கு கையில் ரொக்கமாக ரூ.1000/- (ரூபாய் ஆயிரம் வரை) வைத்துக் கொள்ளலாம்.  அதற்கு மேல் உள்ள தொகையை இணை கணக்காக (Joint Account) தலைவர், பொருளாளர், பெயரில் கணக்கு தொடங்கி பராமரிக்க வேண்டும்.
சங்க சட்ட விதிகளின்படி நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆண்டு மற்றும் இதர அறிக்கைகளை தயாரித்து கோர்வை செய்யதல்.

1) அத்தாட்சி செய்யப்பட்ட ஆண்டு வரவு செலவு கணக்கு மற்றும் அறிக்கையின் நகலும்.
2) நிதியாண்டு முடிவிற்குப்பின் சங்கத்திலுள்ள உறுப்பினர் பெயர், விலாசம் மற்றும் அவர்களின் பணி விபரங்கள் பற்றிய அறிக்கை.
3) நிதியாண்டில் சங்கம் தன்னுடைய பணிகளைத் தொடர்ந்து செயல்படுகிறது என்ற உறுதிமொழி.
நிதியாண்டு என்பது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 01ம் தேதி துவங்கி மறு ஆண்டு மார்ச்சு மாதம் 31ம் தேதி முடிய உள்ள காலமாகும்.

கணக்குகளை தணிக்கை செய்தல் அந்தப் பணிக்காக நியமிக்கப்பட்ட பணியாளர்கள் விபரம்:-
சங்கத்தின் வரவு, செலவுகளுக்குச் சரியான கணக்குகள் வவுச்சர்கள் முதலானவை வைக்கப்பட  வேண்டும்.  ஒவ்வொரு ஆண்டும் நிர்வாகக் குழு  நியமிக்கும் இரு பட்டதாரி உறுப்பினர்கள் அல்லது சார்டர்டு அக்கவுண்டண்ட் கணக்குப் பரிசோதகர் ஒவ்வொரு ஆண்டு முடிவிலும் அந்த ஆண்டு கணக்கு வரவு செலவுகணக்கு மற்றும்  விளையாட்டு  உபகரண இருப்பு ஆகியவைகளை பரீசிலித்து சான்று வழங்குதல் வேண்டும்.
உறுப்பினர் விண்ணப்பத்தின் பேரில் உபவிதிகளில் நகல் வழங்குதல் மற்றும் வரவு செலவினக் கணக்கு ஆகியவற்றின் நகல் வழங்குதல் கட்டணம் வசூலித்தல்:-
சங்க உபவிதிகளின் நகல்கள், வரவு செலவினக் கணக்கு ஆகியவைகளுக்கு நகல் விரும்பும் உறுப்பினர் நகல் ஒன்றுக்கு(ஒரு பக்கத்திற்கு) ரூ.5/- (ரூபாய் ஐந்து) செலுத்தி விண்ணப்பித்துக் கொண்டால் நகல் வழங்கப்படும்.

நிர்வாகக் குழு உறுப்பினர் அல்லது உத்தியோகஸ்தர்கள் உபவிதிகளுக்கு முரணாக நடந்தால் அவர்கள் மீது விதிக்கப்பட வேண்டிய தண்டனை அல்லது அபராதம் விபரம்:-
சங்க விதிகளுக்கு முரணாக நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்களில் எவருமோ அல்லது உத்தியோகஸ்தரோ நடந்து கொண்டால் அவர் நிர்வாகக் குழுவின் பெரும்பான்மை வாக்குகள் மூலம் நிர்வாகக் குழுவிலிருந்து நீக்கப்படுவார்.  அவ்வாறு நீக்கப்பட்டவர் பொதுக்குழுவில் மேல்முறையீடு செய்யலாம்.  பொதுக்குழு முடிவே இறுதியானது.

சங்க ஆஸ்திகள் எதுவும் உறுப்பினர்களிடையே போனஸ், பங்கு போன்ற எந்த ரூபத்திலும் பிரித்துக் கொள்ளத்தக்கதில்லை.
சங்கத்தின் அன்றாடப் பணிகளுக்கான வரவு செலவுப் பணிகளை கவனிக்க நியமிக்கப்பட்ட நியமனதாரர்களின் பணி விரம்:-
செயலாளர் சங்க அன்றாடப் பணிகளுக்கான் செலவுகளையும் இதர பணிகளையும் செய்து வரவேண்டியது.

ஆண்டு ஒன்றுக்கு நடத்தப்படும் மகாசபை கூட்டத்தின் விபரமும் அதை நடத்துவதற்கான விவரம்:-
1) வருடாந்திர நிர்வாகக் குழு மகாசபைக் கூட்டம் நிதி ஆண்டு முடிந்த இரண்டு மாதத்திற்குள் அதாவது மே மாதம் 30ம் தேதிக்குள் தவறாது நிர்வாகக்குழு கூட வேண்டும்.  தேவைப்பட்டால் நிர்வாகக்குழு இடைக்காலத்திலும் கூடலாம்.  நிர்வாகக்குழுகூட்டத்திற்கு குறைந்தது 10 உறுப்பினர்கள் வந்தால் தான் கூட்டம் கூட்ட ஏதுவாகும்.
2) ஒவ்வொரு இரண்டாண்டு கூடும் மகாசபை, அடுத்துவரும் இரண்டு ஆண்டுகளுக்கு தலைவர், துணைத்தலைவர், செயலாளர், துணைச் செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்கும்.
3) ஒவ்வொரு இரண்டாமாண்டு  கூட்டத்திற்கு 21 நாட்கள் முன்னதாக கூட்டம் நடைபெறும் இடம், தேதி, நேரம் கீர்மானிக்கப்பட வேண்டிய விசயங்கள் ஆகியவை அடங்கிய கூட்டறிக்கை செயலாளரால் உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட வேண்டும்.
4) மகாசபைக் கூட்டத்திற்கு தலைவர் தலைமை வகித்து நடத்த வேண்டும்.  தலைவரில்லாத போது துணைத் தலைவரும் அவரும் வருகை தராதபோது வருகை தந்துள்ள உறுப்பினர் ஒருவர் தலைவராக தேர்வு செய்து அவர் தலைமைn யற்று கூட்டத்தை நடத்த வேண்டும்.
5) கூட்டத்தில் எந்த ஒரு தீர்மானத்தையும் ஒருவர் முன்மொழிந்து மற்றொருவர் வழிமொழிந்து ஏகமனதாகவோ அல்லது பெரும்பான்மை வாக்குகளுடனோ முடிவு செய்யப் பெறுதல் வேண்டும்.  வாக்கெடுப்பில் சமவாக்குகள் கிடைத்தால் தலைமை வகிப்பவர் தனக்குள்ள காஸ்டிங் ஓட்டை உபயோகித்து தீர்மானம் முடிவு செய்யப் பெறுதல் வேண்டும்.
6) உறுப்பினர்களால் கொண்டு வரப்படும் தீர்மானம் ஒழுங்கு முறைக்குப் புறம்பானதென்று தலைவர் கருதினால் அதை நிராகரிக்லாம்.
7) எந்த உறுப்பினரும் தன் சம்பந்தப்பட்ட விசயம் விவாதத்திற்கு வந்து வாக்கெடுப்பு நடைபெறும்பொழுது அதில் வாக்களிக்க உரிமையுள்ளவரல்லர்.  ஆனால் தேர்தலில் நிற்பவர் உரிமையுள்ளவரே.

நிர்வாகக்குழு அதிகாரங்கள்
1. செயலாளரால் வைக்கப்டும் தணிக்கை செய்யப்பெற்ற கடந்த ஆண்டு வரவு செலவு கணக்குகளையும் பரிசோதகர் அறிக்கையையும் சரிபார்த்து அங்கீகரித்தல்.
2. சங்க காரியங்களை மேல்பார்த்து அபிவிருத்தி செய்தல்.
3. செயற்குழு பொதுக்குழு உத்தரவின் பேரில் வரும் முறையீடுகளை விசாரித்து தீர்மானம் செய்தல்.
4. உறுப்பினரைத் தகுந்த காரணத்திற்காக சங்கத்திலிருந்து நீக்குதல்.
5. சங்கம் கலைக்கப்பட்டால் சங்கத்தின் ஆஸ்தியை இதுபோன்று கொள்கைகள் உள்ள வேறு சங்கத்துடன் சேர்க்க வேண்டும்.  சங்க உறுப்பினர்கள் சங்க ஆஸ்தியை எக்காரணத்தைக் கொண்டும் பிரித்துக் கொள்ளத்தக்கதல்ல.




கிளப் சார்ந்த விதி 
1. ஒவ்வொரு கிளப்பும்  UVC கிளப்புடன் இணையவேண்டும்.
2. ஒவ்வொரு மாதமும் UVC-இணைப்பு கிளப்புகளின் கூட்டத்தைக் கூட்டி உறுப்பினர்களிடம் விவாதிக்க வேண்டும்.
3. கூட்டத்திற்கு கண்டிப்பாக அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டு, பதிவேட்டில் கையொப்பமிட வேண்டும்.
4. எடுக்கப்படும் தீர்மானங்களில் தலைவர், துணை தலைவர், செயலாளர்,  செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் கிளப் தலைவர்கள் கையொப்பமிட வேண்டும்.
5. கூட்டத்தை தலைவர் தலைமையேற்று நடத்த வேண்டும்.
6. கூட்டத்தில் தீர்மானங்கள் எடுக்கப்படும் பொழுது கிளப் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் அல்லது எல்லா கிளப்பிற்கும் ஒரு நிர்வாக குழு உறுப்பினராவது கலந்து கொள்ள வேண்டும்.
7. நிர்வாகக் குழு எடுக்கும் முடிவுக்கு அனைத்து கிளப்பும் கட்டுப்பட வேண்டும்.
8. கிளப்பில் எடுக்கப்படும் தீர்மானங்கள்
9. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் அமல்படுத்த நடவடிக்கை வேண்டும்.



கிளப் இணைவதற்கான வழிமுறைகள்:
1. கிளப்பில் இணைய முறையாக அதற்கான படிவத்தில் தலைவருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
2. விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் நுழைவு கட்டணம் ரூ.200/-வருடாந்திர கட்டணம் ரூ.100/-ம் கிளப் உறுப்பினர்கள் படிவமும் சமர்ப்பிக்க வேண்டும்.(புகைப்படத்துடன்)
· ஒரு கிளப்பிலிருந்து வீரர் மறு கிளப்பிற்கு விளையாட வேண்டுமானால் 30 நாட்கள் முன்பே அனுமதி வாங்கியிருக்க வேண்டும்.


உறுப்பினர் வரையறை, தகுதி, கட்டுப்பாடு பற்றிய விபரம்


  • 14 வயது பூர்த்தியடைந்தவர்கள் சங்கத்தின் நோக்கங்களுக்கு கட்டுப்பட்டு மேற்படி சங்கத்தின் அங்கத்தினராகச் சேர விரும்புவோர், இச்சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட ஏதாவது ஒரு சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு, அச் சங்கத்தின் தலைவர் மூலமாக விண்ணப்பத்தை ருஏஊ -ன் செயலாளருக்கு அனுப்ப வேண்டும்.  செயலாளர் அடுத்து வரும் கூட்டத்தில் அவ்வித விண்ணங்களை நிர்வாகக்குழுவில் வைப்பார்.  நிர்வாகக்குழு விண்ணப்பத்தை அங்கீகரித்தால் அவர் உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளப்படுவார்                                                                                                           
  • அங்கீகரிக்கவோ எவ்வித காரணமும் கூறாமல் நிராகரிக்கவோ நிர்வாகக் குழுவிற்கு அதிகாரம் உண்டு.                                                                                             
  • சங்கத்திலிருந்து விலகிக் கொள்ள விரும்பும் உறுப்பினர் தன்னுடைய சொந்த கிளப்பில் இராஜினாமா கொடுத்து விலகிக்கொள்ள வேண்டும்.  அவ்வாறு விலகிக்கொண்ட உறுப்பினரின் விரத்தை நீக்கல் படிவம் மூலம் ருஏஊ -க்கு தெரிவிக்க வேண்டியது, ஒவ்வொரு கிளப்பின் கடமையாகும்.  நீக்கல் படிவம் சமர்ப்பிக்கும் வரை அந்த உறுப்பினருக்கு மாதச் சந்தா செலுத்த வேண்டும்.                                                                                                
  • ஒரு கிளப்பிலிருந்து, மற்றொரு கிளப்பிற்கு மாற விரும்புபவர், தான் தற்போது  விளையாடிக்கொண்டிருக்கும் கிளப்பிலிருந்து நீக்கல் கடிதம் பெற்ற பிறகே மற்ற கிளப்பில் இணைய முடியும்.


உறுப்பினர்களிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய நுழைவு மற்றும் இதர கட்டணங்கள்
ஒவ்வொரு கிளப்பும் ஒவ்வொரு மாதமும் ஒரு  வீரர்க்கு ரூ.10 வீதம் வசூல் செய்யப்பட்டது.  ரூ.5/- ருஏஊ கிளப்பிற்கும் மீதம் ரூ.5/- தனது சொந்த கிளப்பிற்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
· கிளப் வீரரை புதிதாக சேர்க்கும் பொழுது அந்த வீரர் கிளப் சார்பாக போட்டியில் விளையாட ருஏஊ கிளப் நிர்வாகக்குழு அனுமதி வழங்கி ருஏஊ கிளப் செயலரிடமிருந்து அனுமதி கடிதம் பெற்ற பிறகே போட்டியில் விளையாட உரிமையுண்டு.
· வீரர்கள் புதுப்பித்தல்விளையாட்டு வீரர்களை ஒவ்வொரு மாதமும் புதிப்பிக்க வேண்டும்.  புதிப்பிக்கப்பட்ட வீரர் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 5 ருஏஊ க்கு கட்ட வேண்டும்.
· உறுப்பினர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட உறுப்பினர் விவரம், நீக்குவதன் சூழ்நிலை, நீக்கப்பட்டதின் பேரில் மேல்முறையீடு விபரம்:-
· சங்க நோக்கங்களுக்கும், வளர்ச்சிக்கும், கௌரவத்திற்கும் முரணாகவும் தீங்கு விளைவிக்கும் முறையிலும் நடந்து கொள்ளும் உறுப்பினர் நிர்வாகக் குழுவின் பெரும்பான்மை வாக்குகள் மூலம் உறுப்பினர் பட்டியலிலிருந்து நீக்கப்படுவார்.
· அவ்வாறு நீக்கப்பட்ட உறுப்பினர் நீக்கப்பட்டதிலிருந்து ஒரு மாத காலத்திற்குள் நிர்வாகக்குழுவிற்கு தனது சொந்த கிளப் தலைவர் மூலமாக மேல்முறையீடு செய்து கொண்டால் அவ்வித முறையீடு நிர்வாகக்குழுவினால் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டால் அவர் மறுபடியும் உறுப்பினராக இருந்து வருவார்.  ஆனால் அவ்வித முறையீட்டை நிர்வாகக் குழு  நிராகரித்து விட்டால் அவர் மறுபடியும் உறுப்பினராக எக்காரணத்தைக் கொண்டும் அனுமதிக்கப்பட மாட்டார்.
· உறுப்பினர்கள் சங்கத்தின் எந்தப் பதவிக்கும் தேர்தலில் நிற்க உரிமை உண்டு.

சங்கம் தன்னுடைய பணிகளைச் செய்யும் விதம் 
· சங்கம் தன்னுடைய பணிகளையும் அலுவல்களையும் இச்சங்கத்தின் விதிமுறைகளின்படி முதலில் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து ஆலோசித்து பிறகு உறுப்பினர்களைக் கொண்டு செயல்படுத்தல்.

ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

ஒருங்கிணைந்த கையுந்து பந்து கழகம்


      எண்ணற்ற விளையாட்டுகளில் கையுந்து பந்தானது பெரியவர்கள், சிறியவர்கள், இளைஞர்கள்களின் விளையாட்டு ஆர்வத்தை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு அற்புதமான, நேர்த்தியானவிளையாட்டாகும், இவ்விளையாட்டானது காளையார்கோவில் பகுதிகளில் மிக அதிக அளவில் அனைத்து தரப்பினராலும் விருப்ப விளையாட்டாக விளையாடப்பட்டு வருகிறது.  இவ்விளையாட்டை இப்பகுதியில் வளர்க்க, இளைஞர்களை ஆர்வமுடன் பங்கேற்கச் செய்ய, இளைஞர்களிடம் தலைமைப்பண்பை வளர்க்க, ஒரு அமைப்பு தேவை என்பதை உணர்ந்து இக்கழகமானது ஆரம்பிக்கப்படுகிறது. காளையார்கோவில் ஒருங்கிணைந்த கையுந்து பந்து கழகம், கையுந்து பந்தை வளர்க்க தனது பங்களிப்பை வழங்கும்.

நோக்கம் :
1. சிறுவர்கள், இளைஞர்களை பெரியவர்கள் இவ்விளையாட்டின் மேல் ஆர்வம் ஏற்பட பங்காற்றுதல்.
2. சிறுவர்கள், இளைஞர்கள்,பெரியவர்கள்  விளையாடுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தல்.
3. விளையாட்டுத்திறனை முறையாக கற்றுக் கொள்ள வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தல்.
4. விளையாடுவதற்கான எண்ணங்களை உருவாக்க நல்ல பல திட்டங்களை உருவாக்குதல்.
5. காளையார்கோவிலில், வாலிபால் கழகங்கள் மேலும் உருவாக பாடுபடுதல்.
6. ஏற்கனவே உருவான கழகங்களை பேணிக்காத்து  வளர்க்க உதவுதல்.
7. விளையாட்டு மைதானங்கள் உருவாக்க உதவி செய்தல்.
8. விளையாட்டு உபகரணங்கள் ஏற்பாடு செய்தல்.
9. சிறந்த விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு, மாவட்ட, மாநில, தேசிய அணிகளில் விளையாட வழிகாட்டுதல், மேலும் உதவி செய்தல்.
10. வாலிபால் கிளப்புகளிடையே நல்லெண்ணத்தை உருவாக்குதல்.